பொள்ளாச்சி தொகுதியில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, தொகுதியில் சுரங்கப்பாதை, மேம்பாலம் மற்றும் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.


Coimbatore: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு 08.08.2024 அன்று நடைபெற்றது. இதில் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள பல்வேறு சாலைப் பிரச்சினைகளை எடுத்துரைத்து, அவற்றுக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

அவரது முக்கிய கோரிக்கைகள்:

1. உடுமலை - பழனி சாலையில் பஞ்சாபி தாபா சந்திப்பில் புதிய கீழ்பாலம் (சுரங்கப்பாதை) அமைக்க வேண்டும்.

2. வேடபட்டி நால்ரோடு சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

3. பொள்ளாச்சி - உடுமலை நெடுஞ்சாலையில், அமுதசுரபி உணவகம் முதல் மரப்பேட்டை சந்திப்பு வரை, மெயின்ரோடு மற்றும் சர்வீஸ் ரோடு இடையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மீடியன்களை அகற்ற வேண்டும்.

இந்த கோரிக்கைகள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து, நேரடியாக அமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி.

இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், பொள்ளாச்சி தொகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பயணிகளின் நேரம் மிச்சப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...