பில்லூர் பிரதான குடிநீர் குழாய் பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்களுக்கு குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தம்

கோவை : கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வரும்‌ பில்லூர் குடிநீர் திட்டத்தில்‌ அவசரமாக குடிநீர் பராமரிப்பு பணிகள்‌ மேற்கொள்ளப்படவுள்ளதால்‌ வரும்‌ 25.09.2019 மற்றும்‌ 26.09.2019 ஆகிய இரண்டு நாட்களுக்கு கீழ்க்கண்ட பகுதிகளில் குடிநீர்‌ விநியோகம்‌ தடைபடும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம்‌, கணபதி, ரத்தினபுரி, சித்தாபுதூர்‌, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி, காந்திமாநகர்‌, பீளமேடு, செளரிபாளையம்‌, புலியகுளம்‌, சிங்காநல்லூர்‌, ஒண்டிப்புதூர்‌, ராமநாதபுரம்‌, ஜி.எம்.நகர்‌, அல்‌அமின்‌ காலனி, பொன்விழா நகர்‌, சாரமேடு, கரும்புக்கடை ஆகிய பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு குடிநீர்‌ விநியோகம்‌ தடைபடும்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள்‌ மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter