தனியார்‌ நிறுவனங்களில்‌ தொழில் பழகுநர் பயிற்சி ; ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கோவை : கோவை மாவட்டத்தில்‌ உள்ள தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்கள்‌ மற்றும்‌ பல்வேறு முன்னணி தனியார்‌ தொழிற்நிறுவனங்களில்‌ ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட தொழில்‌ பழகுநர்‌ பயிற்சியிடங்கள்‌ நிரப்பப்பட உள்ளன.

கோவை : கோவை மாவட்டத்தில்‌ உள்ள தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்கள்‌ மற்றும்‌ பல்வேறு முன்னணி தனியார்‌ தொழிற்நிறுவனங்களில்‌ ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட தொழில்‌ பழகுநர்‌ பயிற்சியிடங்கள்‌ நிரப்பப்பட உள்ளன.

எனவே ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்று தொழில்‌ பழகுநர்‌ பயிற்சி பெறாதவர்களும்‌, ஜுலை -:19 ஆம்‌ ஆண்டு அகில இந்திய தொழிற்‌ தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்கு காத்திருப்போர்களும் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில்‌ தங்கள்‌ விபரங்களை பதிவு செய்து‌ கொண்டும்‌ மற்றும்‌ கோவை அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்‌ உள்ள உதவி இயக்குநர்‌ , மாவட்ட திறன்‌ பயிற்சி அலுவலகத்துக்கு நேரில்‌ வந்து பதிவு செய்து, தொழில்‌ பழகுநர்‌ பயிற்சி பெற்று பயன்‌ பெறலாம்‌.

தொழில்‌ பழகுநர்‌ பயிற்சி பெறும்‌ போது, தொழில்‌ பழகுநா்களுக்கு பிரதி மாதம்‌ ரூ.7500 முதல்‌ ரூ.10000 வரை தொழிற்பிரிவுக்கு ஏற்றவாறு நிறுவனத்தார்‌, அரசு விதிகளின்படி உதவித்‌ தொகை வழங்குவார்கள்‌. தொழில்‌ பழகுநா்‌ பயிற்சியில்‌ தேர்ச்சி பெறுபவர்களுக்கு இந்திய அரசின்‌ தேசிய தொழில்‌ பழகுநர்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்‌.

இச்சான்றிதழுக்கு அரசு மற்றும்‌ தனியார்‌ நிறுவன வேலைகளிலும்‌, வெளிநாட்டு வேலைவாய்ப்பில்‌ முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, இந்த நல்வாய்ப்பினை அனைத்து ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்று இதுநாள்‌ வரையில்‌ தொழில்‌ பழகுநர்‌ பயிற்சி பெறாத பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும்‌ பயன்படுத்தி கொண்டு பயன்பெறலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter