கோவையில் வரும் 8ம் தேதி சங்கமேஸ்வரர் திருக்கோவில்‌ தேர்‌ ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்‌

கோவை: அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில்‌ தேர்‌ ஊர்வலம்‌ 8.2.2020 அன்று நடைபெறுவதை முன்னிட்டு காலை 9 மணி முதல்‌ மதியம்‌ 1 மணி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

கோவை: அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில்‌ தேர்‌ ஊர்வலம்‌ 8.2.2020 அன்று நடைபெறுவதை முன்னிட்டு காலை 9 மணி முதல்‌ மதியம்‌ 1 மணி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

1) கோவை மாநகர் அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர்‌ திருக்கோவில்‌ தேர்‌ திருவிழா ஊர்வலம்‌ வருகின்ற 08.02.2020 அன்று காலை நடைபெறுவதை ஒட்டி அவினாசி ரோடு பழைய மேம்பாலம்‌ மற்றும்‌ புரூக்பாண்ட்‌ சாலையிலிருந்து உக்கடம்‌ பகுதிக்கு வரும்‌ கரக வாகனங்கள்‌ கூட்செட்‌ ரோடு பெரிய கடை வீதி சந்திப்பில்‌ இருந்து இடதுபுறம்‌ திரும்பி திருச்சி ரோடு கிளாசிக்‌ கோபுரம்‌ சந்திப்பை அடைந்து வலது புறம்‌ திரும்பி வாலாங்குளம்‌ பைபாஸ்‌ ரோடு வழியாக உக்கடம்‌ செல்ல வேண்டும்‌.

2) திருச்சி ரோட்டிலிருந்து உக்கடம்‌ பகுதிக்கு வரும்‌ கனரக வாகனங்கள்‌ சுங்கம்‌ சந்திப்பிலிருந்து இடது புறம்‌ திரும்பி வாலாங்குளம்‌ பைபாஸ்‌ ரோடு வழியாக உக்கடம்‌ செல்ல வேண்டும்‌.

3) மரக்கட்டை NH ரோட்டிலிருந்து டவுன்ஹால்‌ வழியாக உக்கடம்‌ செல்லும்‌ அனைத்து கனரக வாகனங்களும்‌ ஐந்து முக்கு மணிக்கூண்டு லங்கா கார்னர்‌ வழியாக கிளாசிக்‌ டவர்‌ சந்திப்பை அடைந்து வலதுபுறம்‌ திரும்பி வாலாங்குளம்‌ பையாஸ்‌ ரோடு வழியாக உக்கடம்‌ செல்ல வேண்டும்‌ .

பொது மக்களும்‌ வாகன ஓட்டிகளும்‌ இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter