தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு; மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படும் - தமிழக அரசு

சென்னை: நாளை மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


சென்னை: நாளை மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Newsletter