கோவையில் இறைச்சி கடைகள் செயல்பட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்‌ தொடா்ச்சியாக, மாநகராட்சியின்‌ அனுமதி பெற்ற இறைச்சிக்‌ கடைகளுக்கான விதிமுறைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப அவர்கள்‌ அறிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்‌ தொடா்ச்சியாக, மாநகராட்சியின்‌ அனுமதி பெற்ற இறைச்சிக்‌ கடைகளுக்கான விதிமுறைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப அவர்கள்‌ அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறைச்சி கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள் அதை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு முன்பு அலை மோதுகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இறைச்சிக்‌ கடைகள்‌ செயல்படுவதற்கு கீழ்கண்ட நிபந்தனைகளுடன்‌ அனுமதி வழங்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அறிவித்துள்ளார். 

1. மிகவும்‌ குறுகலான பொதுமக்கள்‌ வசிக்கும்‌ பகுதிகளில்‌ கடை செயல்படுவதற்கு அனுமதி இல்லை.

2. இறைச்சிகளை கடைகளில்‌ தொங்க விடுவதும்‌ வாடிக்கையாளர்கள்‌ வந்த பின்பு அவர்கள்‌ முன்னிலையில்‌ வெட்டுவதும்‌ கூடாது.

3. வாடிக்கையாளர்கள்‌ வருவதற்கு முன்பே இறைச்சிகளை வெட்டி பார்சல்‌ செய்து வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

4. ஒரு வாடிக்கையாளர்‌ வந்தவுடன்‌ அவருக்கு தேவையான எடையை கொடுத்து அனுப்பிவிட வேண்டும்‌ ஒரு வாடிக்கையாளருக்கு 30 வினாடிகளுக்கு மேல்‌ கடையில்‌ நிற்பதற்கு அனுமதி இல்லை.

5. இறைச்சி கடை உரிமையாளர்கள்‌ வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்துவதற்கு குறைந்தது ஒருநபரை கடையின்‌ வெளியில்‌ நிறுத்தி விசில்‌ ஓலி மூலம்‌ வாடிக்கையாளர்களை மூன்று அடி இடைவெளியில்‌ நிறுத்தி அதை ஒழுங்குபடுத்த வேண்டும்‌.

6. இறைச்சி விற்பனையாளர்கள்‌ முடிந்தவரை தங்களுடைய வாடிக்கையாளாகளிடம்‌ தொலைபேசியில்‌ ஆர்டர்களை பெற்று வீடுகளில்‌ நேரிடையாக விநியோகிப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்‌. குறிப்பாக, ஞாயிற்றுக்‌ கிழமைகளில்‌ இதனை அவசியம்‌ செய்ய வேண்டும்‌.

7. ஞாயிற்றுக்‌கிழமை இறைச்சிக்‌ கடைகளில்‌ அதிக கூட்டம்‌ இருப்பதால்‌ கடை உரிமையாளர்கள்‌ தங்களது பொறுப்பில்‌ வாடிக்கையாளர்களை வரிசையில்‌ நிறுத்தி சமூக இடைவெளி கடைபிடிப்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்‌.

8. இரத்தம்‌, குடல்‌, எலும்பு மற்றும்‌ ஈரல்‌ போன்றவற்றையும்‌ வாடிக்கையாளர்கள்‌ வருவதற்கு முன்னரே சுகாதார முறையில்‌ பொட்டலங்களாக தயார்‌ செய்து விநியோகம்‌ செய்ய வேண்டும்‌.

9. இந்த விதி முறைகளை கடைபிடிக்காத இறைச்சி கடைகள்‌ அப்பொழுதே மூடி சீல்‌ வைக்கப்படும்‌. இவ்வாறு கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...