முழு ஊரடங்கு எதிரொலி: வெளியூர் செல்வதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க ஆட்சியர் அலுவலகம் வருகை தர அனுமதியில்லை - கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் வெளியூர் செல்லுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தர அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் உயிரிழப்புகள் மற்றும் தொற்றை கட்டுபடுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளை தாண்டி வெளியே சுற்றி திரிபவர்கள் மீறி காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு ஏப்ரல் 26ம் தேதி காலை 6.00 மணி முதல் ஏப்ரல் 29ம் தேதி மாலை 9.00 மணிவரை அமல்படுத்தப்பட உள்ளதால் பொதுமக்கள் வெளியூர் செல்லுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தர அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார். 

மேலும், அவசர தேவைக்காக வாகன அனுமதி கோருபவர்கள் இ-பாஸ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி தெரிவித்தார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...