Koyampuththoor பெயர் ரத்து! . தமிழில் ஊர் பெயர்கள் மாற்றப்பட்ட உத்தரவு மறுபரிசீலனை - அமைச்சர் மாஃபா கே. பாண்டியராஜன்

கோவை: தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டு வெளியான உத்தரவு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது விளைவாக, அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது தமிழக அரசு.

குறிப்பாக கோவையை சேர்ந்த மக்கள் கோயம்புத்தூர் என்ற தமிழ் சொல் ஆங்கிலத்தில் இனிமேல் Koyampuththoor என்று அழைக்கப்படும் என்ற அறிவிப்பை கடுமையாக எதிர்த்தனர். மேலும் #Koyampuththoor என்ற ஹேஷ்டேக்கை பெருவாரியான மக்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா கே. பாண்டியராஜன், தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டு வெளியான உத்தரவு மரு பரிசீலனை செய்யபட்டு புது உத்தரவு இன்னும்.2-3 நாட்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter