கோவை மாவட்டத்தில் இன்று முதல் பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் - மாவட்ட ஆட்சியர்!

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று முதல் பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தில் இன்று முதல் பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விபரம்:-

கோவையில் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பொது முடக்கத்தில் இன்று முதல் கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தேநீர்க் கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பாா்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். மின் பொருள்கள், ஹாா்டுவோ் கடைகள், புத்தகங்கள், எழுது பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், காலணிகள் விற்பனையகங்கள், பாத்திரக் கடைகள், அழகு சாதனப் பொருள்கள் விற்பனையகங்கள், ஸ்டுடியோக்கள், சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், மிக்ஸி, கிரைண்டா், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வாகனங்கள் விநியோகம், வாகனப் பழுதுபார்க்கும் மையங்கள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், செல்லிடப்பேசி மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கணினி வன் பொருள்கள், மென் பொருள்கள், மின்னணு சாதனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருள்கள் விற்பனையகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

சாலையோர உணவுக் கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பாா்சல் சேவைகள் மட்டும் மேற்கொள்ளலாம். அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள், சாா் பதிவாளர் அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்களும், தனியாா் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் சேவைகள் 50 சதவீத பணியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இந்திய பங்கு மற்றும் பரிவா்த்தனை வாரியம் 50 சதவீத பணியாளா்களுடனும், ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்கள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளா்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளா்களுடனும், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 20 சதவீதப் பணியாளா்களுடனும், வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 33 சதவீதப் பணியாளா்களுடனும், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்கள் 33 சதவீதப் பணியாளா்களுடனும் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து வகையான கட்டுமான பணிகளும் அனுமதிக்கப்படும்.

அழகு நிலையங்கள், சலூன்கள் குளிா்சாதன வசதியில்லாமல் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்களை மட்டும் அனுமதித்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். விளையாட்டு பயிற்சிக் குழுமங்கள் இயங்கவும், பாா்வையாளா்கள் இல்லாமல் திறந்தவெளியில் போட்டிகள் நடத்தவும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும்.

பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்படும். பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் சோ்க்கை தொடா்பான பணிகள் அனுமதிக்கப்படும். இ-சேவை மையங்கள் வழக்கம்போல செயல்படலாம்.

இனிப்பு, காரவகை விற்பனையகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகளை திறந்தவெளியில் 100 நபா்கள் மட்டுமே பங்கேற்று மேற்கொள்ளலாம். அனைவரும் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே பங்கேற்க வேண்டும். திரையரங்குகளில் தொடா்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணியினை மேற்கொள்ளலாம். தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவீதப் பணியாளா்களுடன் செயல்படலாம்.

கோவை மாவட்டத்துக்குள் நடைபெறும் திருமணங்களுக்கு இ-பாஸ், இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம். வெளி மாவட்டங்களில் திருமணம் சாா்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ் கட்டாயம். ஆன்லைன் மூலம் மணமகன், மணமகள் அல்லது அவா்களது பெற்றோா் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். திருமண நிகழ்வுகளில் 50 நபா்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா்.

தொழிற்சாலைகளில் பணியாளா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருத்தல், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை நிா்வாகங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளை தினமும் குறிப்பிட்ட இடைவெளியில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், தனியாா் அலுவலகங்கள், கடைகள் ஆகியவற்றில் பணியாற்றும் அனைவரும் ஒரு மாதத்துக்குள் தடுப்பூசி செலுத்த கொள்ள வேண்டும் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...