பராமரிப்பு பணிகள் நிறைவு..! தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இனி மின்வெட்டு இருக்காது - தமிழக அரசு அறிவிப்பு!

கோவை: பராமரிப்பு பணிகள் முடிவுற்றதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின்வெட்டு இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.


கோவை: பராமரிப்பு பணிகள் முடிவுற்றதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின்வெட்டு இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

குறிப்பாக, பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை கற்று வருகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தவாறே அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மின் தடை செய்யப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மின் பராமரிப்பு பணிக்காக ஓரிரு இடங்களில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி தொடங்கிய பராமரிப்பு பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இனிமேல் உறுதியாக மின்தடை இருக்காது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும், மின்வாரிய அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் எனவும் புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...