ஆன்லைன் மூலம் உறவினர் போல பேசி பணம் மோசடி: கோவை சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

கோவை: ஆன்லைன் மூலமாக உறவினர் போலவும், பெண்கள் குரலிலும் கவர்ச்சிகரமாக பேசும் நபரிடம் உங்கள் தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என கோவை சைபர் கிரைம் போலீஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: ஆன்லைன் மூலமாக உறவினர் போலவும், பெண்கள் குரலிலும் கவர்ச்சிகரமாக பேசும் நபரிடம் உங்கள் தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என கோவை சைபர் கிரைம் போலீஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில், நண்பர்கள் உறவினர்கள் பெயரை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபடுபவர்களிடம் விழிப்புடன் இருக்க கோவை மாவட்ட ‘சைபர் கிரைம்’ போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஃபேஸ் புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தற்போது உறவினர்கள், நண்பர்கள் பெயர்களில் அதிகளவில் மோசடி நடக்கிறது.

அவ்வாறு, மோசடி பேர் வழிகளிடம் சிக்கி பணத்தை இழப்பதைத் தவிர்க்க விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட ‘சைபர் கிரைம்’ போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி., சங்கு இதுகுறித்து கூறியதாவது:

‘‘குறுகிய கால கடன் தருவதாக ஆதார், பான் கார்டு எண்கள் கொடுத்தால் போதும் எனும் விளம்பரங்களை நம்ப வேண்டாம். இதன் மூலம் உங்கள் பெயரில் கணக்கு தொடங்கி மோசடி நடக்க வாய்ப்புள்ளது. ராணுவத்தில் பணிபுரிவதாக சமூக வலைத்தளங்களில் கூறி, கார், பைக் விற்பனை மோசடிகள் நடக்கின்றன. இத்தகையோரின் உண்மை தன்மையை அறிந்து அதன் பின் பணம் தரலாம். ஏ.டி.எம்., பின் நம்பர், மொபைல், இ-மெயில் பாஸ்வேர்டுகளை, எண்கள், எழுத்து, குறியீடுகள் ஆகியவற்றை பயன்படுத்தி ஏற்படுத்த வேண்டும். உங்கள் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு மட்டும் நீண்ட நேரம் ‘நெட்வொர்க் சிக்னல்’ கிடைக்கவில்லை எனில் முன்னெச்சரிக்கையாக வங்கிக்கணக்கை முடக்குவது நல்லது.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களின் புகைப்படம், பெயரை பயன்படுத்தி, உங்களுடன் நண்பராகி ஆண் அல்லது பெண் குரலில் திருமணம் செய்து கொள்வதாக மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதைத்தவிர்க்க புகைப்படம், இதர தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும். இதுகுறித்து, https://www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். மேலும், 155260 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்'' என்று அவர் கூறினார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...