வரும் 5-ஆம் தேதி முதல், கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் பிற இரயில் சேவை துவக்கம் - தென்னக ரயில்வே அறிவிப்பு

கோவை: ஊரடங்கு காரணமாக கோவையிலிருந்து சென்னைக்கு செல்லக்கூடிய ரயில்கள் நிறுத்தப்பட்டன. அதேபோல, மும்பை மற்றும் இதர மாநிலங்களுக்கு செல்ல கூடிய சிறப்பு ரயில்களும் நிறுத்தப்பட்டன.


கோவை: ஊரடங்கு காரணமாக கோவையிலிருந்து சென்னைக்கு செல்லக்கூடிய ரயில்கள் நிறுத்தப்பட்டன. அதேபோல, மும்பை மற்றும் இதர மாநிலங்களுக்கு செல்ல கூடிய சிறப்பு ரயில்களும் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு காரணத்தினால், சென்னை-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸின் சேவை வருகிற 5 ஆம் தேதி முதல் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது என தென்னக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று காரணமாக மாா்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்ட சென்னை-கோவை சதாப்தி சிறப்பு ரயில் (எண்-06029) மற்றும் கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரயில் (எண்-06030) ஜூலை 5 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

இதேபோல, கேரள மாநிலம், கொச்சுவேலி-கா்நாடக மாநிலம், பானஸ்வாடி சிறப்பு ரயில் (எண்-06319) ஜூலை 8 ஆம் தேதி முதலும், பானஸ்வாடி-கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்-06320) ஜூலை 9ஆம் தேதி முதலும் மீண்டும் இயக்கப்படுகிறது.

கோவை வழித்தடத்தில் இயங்கும் வாரந்திரச் சிறப்பு ரயில்களின் இயக்கம் நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தென்னக இரயில்வே, மேற்கு வங்கம், ஹவுராவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்-02877) ஜூலை 3 ஆம் தேதி முதல் செப்டம்பா் 25 ஆம் தேதி வரையும், எா்ணாகுளம்- ஹவுரா வாராந்திர சிறப்பு ரயில் (எண்- 02878) ஜூலை 5 ஆம் தேதி முதல் செப்டம்பா் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், பீகாா் மாநிலம், பரௌனியில் இருந்து எா்ணாகுளத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்-02521) ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எா்ணாகுளம் – பரௌனி வாராந்திர சிறப்பு ரயில் (எண்-02522) ஜூலை 9ஆம் தேதி முதல் செப்டம்பா் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், கோரக்பூரில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்-02511) மற்றும் கொச்சுவேலி-கோரக்பூா் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 1ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...