எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவிற்கு போத்தனூர் வழியாக மீண்டும் ரயில் இயக்கம்!

கோவை: எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவிற்கு போத்தனூர் வழியாக மீண்டும் ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவிற்கு போத்தனூர் வழியாக மீண்டும் ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பானஸ்வாடிக்கு இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் (06129) சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து போத்தனூர், திருப்பூர், ஈரோடு, மற்றும் சேலம் வழியாக 5-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

மேலும், இதேபோல மறு மார்க்கமாக பானஸ் வாடியிலிருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் சேவையும் வருகிற 6-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இதேபோல் கொச்சுவேலியிலிருந்து பானஸ்வாடிக்கு இயக்கப்பட்ட ஹம்சபர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் வருகிற 8-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்த ரயில் கோவை, ஈரோடு, சேலம் வழியாக செல்கிறது. இதேபோல மறு மார்க்கமாக இந்த ரயில் சேவையை வருகிற 9-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரயில் வருகிற 5 ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. அதேபோல கோவையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் சேவையும் அன்றைய தினம் தொடங்கப்படுகிறது. இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...