கொரோனா தொற்று பரவலை தடுக்க கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர்..!

கோவை: கொரோனா தொற்று பரவலை தடுக்க கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


கோவை: கொரோனா தொற்று பரவலை தடுக்க கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனாலும் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் கேரளாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் வருபவர்களாலும், சோதனைச் சாவடிகளில் போதுமான கெடுபிடிகள் இல்லாததாலும் கோவையில் கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், பாலக்காட்டில் இருந்து தனியார் பஸ்சில் கோவைக்கு அழைத்து வருகின்றனர். அவர்களுக்கு தொற்று உள்ளதா இல்லையா என்பதை சோதனை செய்யாமல் கோவைக்குள் அனுமதிப்பதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க கேரளாவில் இருந்து வருபவர்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தசமீரன் கூறியுள்ளார்.

கேரளாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வாளையாறு உள்ளிட்ட பல்வேறு சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இ-பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தொற்று இல்லாதவர்களா? என்றும் ஆய்வு செய்யப்படுகிறது.

இதுதவிர, கோவை எல்லையில் உள்ள கேரள மாநில மாவட்டங்களான பாலக்காடு திருச்சூர் மாவட்ட அதிகாரிகளிடம் கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்புகொண்டு தொற்று பாதிப்பு விவரங்களை கேட்டறிந்து வருகிறார்கள். கேரளாவிலிருந்து இ-பாஸ் இல்லாமல் வாகனங்களில் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தடுப்பூசி போட்டு அவர்களை மட்டுமே அனுமதிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...