கோவையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு... விதிமுறைகளை அறிவித்தார் கலெக்டர் சமீரன்..!

கோவை: கோவையில் இன்று முதல் கொரோனா ஊரடங்கு பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் இன்று முதல் கொரோனா ஊரடங்கு பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தளர்வுகள் தொடா்பாக கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

‘‘கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு பொதுமுடக்கத்தில் இன்று முதல் கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அரசு, தனியார் தொழில் சார்ந்த பொருள்காட்சி நடத்த அனுமதிக்கப்படும்.

உணவகங்கள், பேக்கரிகள், தங்கும் விடுதிகளில் உள்ள உணவகங்களில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை 50 சதவிகித வாடிக்கையாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பார்சல் சேவைக்கு மட்டும் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். தேநீா்க் கடைகளும் 50 சதவிகித வாடிக்கையாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவிகித வாடிக்கையாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளா்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.

தங்கும் விடுதிகள், லாட்ஜ், விருந்தினா் இல்லங்களில் 50 சதவிகித வாடிக்கையாளா்களை அனுமதிக்கலாம். தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழாய்வு இடங்கள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வழிபாட்டுத் தலங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதியில்லை.

துணி, நகைக் கடைகள் 50 சதவிகித வாடிக்கையாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். வணிக வளாகங்கள், மால்கள் காலை 9 முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதேநேரம் இங்குள்ள திரையரங்குகள், விளையாட்டு அரங்கங்கள் செயல்பட அனுமதியில்லை.

மேலும் மாவட்டத்துக்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், குளிர் சாதன வசதி இல்லாமல் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமா்ந்து பயணிக்க மட்டுமே அனுமதிக்கப்படும்.

அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், அரசு பயிற்சி நிலையங்கள் உள்பட பயிற்சி மையங்கள் 50 சதவிகித பயிற்சியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவிகித வாடிக்கையாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இந்த பூங்காக்களில் திறந்த வெளியில் நடத்தப்படும் விளையாட்டுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், நிறுவனங்களில் பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொது மக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.

மேற்காண் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறும் கடைகள் தனி நபா்கள் மீது பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 51-60ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமணங்கள், இதர நிகழ்வுகள் கொரோனா வழிகாட்டி முறைகளைப் பின்பிற்றி 50 போ் மட்டும் அனுமதிக்கப்படுவா். மேலும் இறுதி சடங்குகளில் 20 போ் மட்டும் அனுமதிக்கப்படுவா்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...