கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்... கலெக்டர் தகவல்..!

கோவை: கேரளா மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கேரளா மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் இருந்து கோவை வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கேரளா எல்லையையொட்டியுள்ள 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஆகியோர் அடங்கிய குழுவினர் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை வாளையார், வேலந்தாவலம், பொள்ளாச்சியில் உள்ள 2 சோதனைச்சாவடிகள், வால்பாறை, ஆனைக்கட்டி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதில் இ-பாஸ் மற்றும் வெப்ப அளவு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் கூறுகையில், ‘‘கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்’’ என்றார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...