இன்றைய மருத்துவ சிந்தனை: வசம்பு

வசம்பை விளக்குத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் 3 முறை உரைத்து தொப்புளைச் சுற்றி தடவலாம் அல்லது வசம்பைச் சுட்டு கரியாக்கி 100 மி.கி. அளவு, 1 பாலாடை அளவு தாய்ப்பாலில் கலக்கி உள்ளுக்குள் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.



வசம்பை விளக்குத் தீயில் சுட்டு அவற்றை தாய்ப்பாலில் 3 முறை உரைத்து குழந்தைகளின் நாக்கில் தடவி வந்தால் நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீரொழுகல் ஆகியன தீரும்.

வசம்பு, புதினா இலை, சின்ன வெங்காயம், மிளகு , சீரகம் இவ்வைந்தையும்  தேவையான அளவு எடுத்து கஷாயம் செய்து அதனுடன்  பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவந்தால் சிறுநீரகக் கோளாறுகள்  அனைத்தும் நீங்கும்.

வசம்பு சிறிதளவு எடுத்து அதனுடன் இரண்டு வெற்றிலை சேர்த்து மென்று தின்று உடனே இரண்டு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிறு உப்புசம் குணமாகும்.

வசம்புத்தூளை எலுமிச்சைச் சாறில் கலந்து குடித்து வந்தால் கடுமையான  வாந்தி உடனே நிற்கும்.

வசம்புத்தூள் (சிறிதளவு) அதனுடன் ஒரு செவ்வாழை பழத்தை சேர்த்து சாப்பிட்டுவந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.

வசம்புடன் வல்லாரை இலையை வைத்து அரைத்து தேனில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகமாகும்.

Newsletter

கொரோனா எதிரொலி - கோவையில் 12 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் தீவிர கண்காணிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வà...

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 2 பெண்கள் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருமà...