தமிழகத்தில் 6வது நாளாக தொடரும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு தொடர் போராட்டதில் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. எனினும் போராட்டக்காரர்கள் மழையினை பொருட்படுத்தாமல் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை வஉசி மைதானத்தில் நேற்று விடிய விடிய கொட்டிய மழையிலும் தங்களது போராட்டத்தை கைவிடாமல் நடத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை நாளான நேற்று பள்ளிகள் விடுமுறை என்பதால் கோவை வஉசி மைதானத்தில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்கள். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டத்தில் இன்று பெண்களின் கூட்டம் அலைமோதியது. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகையில் இரவில் தீடீர் மழை குறுக்கிட்டதால், மழையினையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் போராட்டத்தை கைவிடாமல் கோஷங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.

மழையில் பொதுமக்கள் போராடுவதை கண்டு தன்னார்வலர்கள் பலர் குடைகள் மற்றும் தார்பாய்கள் கொடுத்து உதவினர். கடும் பனியிலும், மழையிலும் போராட்டத்தை கைவிடாமல் நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் பெய்த திடீர் மழையின் காரணமாக இளைஞர்கள் பலர் அவிநாசி சாலையில் உள்ள சாலை ஓரங்களில் படுத்தும் வருகின்றனர்.

மேலும், நேற்று மாலை தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநர் முயற்சியில் ஜல்லிகட்டிற்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின் இந்த அவசர சட்டம் நிரந்தரம் அல்ல என்றும் தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்க்கு நிரந்தர சட்டம் வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தமிழக முழுவதும் உள்ள போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.