கோவை வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதை அறிந்த மூதாட்டி ஒருவர் தனது பேரன் போரட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அவரை பார்க்க வேண்டும் என்று வ.உ.சி. மைதானம் வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து மூதாட்டி கூறுகையில், 'என் பெயர் ஜெயபாரதி (69), சூலூரை அடுத்த ராசிபாளையம் எனது சொந்த ஊர். எனது மகள் வழிப்பேரன் சந்தோஷ் குமார் (24). ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. அவரை பார்க்காமல் நான் வீட்டுக்கு திரும்பமாட்டேன்' என்றார்.
