கோவை வ.உ.சி. மைதானத்தில் அறவழிப்போரட்டம் நடத்திய மாணவர்கள் மீது இன்று காலை போலீசார் தடியடி நடத்தினர். மேலும், அப்பகுதியில் இருந்த இளைஞர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர். இந்த தாக்குதலில் கல்லூரி மாணவி ஜோதி என்பவரின் கை உடைந்தது.
போலீசாரின் இந்த செயலை கண்டித்து கோவை நீதிமன்ற வளாகத்தின் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், காவல்துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தற்போது 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
