தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள், திருமண உதவி தொகை திட்டங்கள், கல்வி உதவி தொகை, வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு நல உதவி திட்டங்கள் வழங்கபட்டு வருகின்றது.
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடகம் நடைபெற்றது.
இதில் 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.
தொடர்ந்து குறை தீர்ப்பு முகாமிற்கு வந்த பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகிக்கபட்டது. வரும் 31 தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நாடகங்களை நடத்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலதுறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.