மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கோவையில் சிபிஐஎம், விசிக கட்சியினர் சாலை மறியல்

ஜல்லிக்கட்டு மீதான தடையினை நிரந்தரமாக நீக்கக் கோரி கோவையில் நடைபெற்று வந்த போராட்டத்தைத் தொடர்ந்து இன்று காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரின் மீதும் கொடூரமான கொலைவெறித் தாக்குதல் நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.



மேலும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால், கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதனைத்தொடர்ந்து, அமைதியான முறையில் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கவேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்றிணைந்து காந்திபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கட்சியினருடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் மீண்டும் மாணவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...