துணிநூல் துறையில் நெசவாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு


கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம் இலுப்பநத்தம் ஊராட்சி, சிறுமுகை பகுதிகளில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நெசவாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த செய்தியாளர்கள் பயணம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. 

இப்பயணத்தின்போது மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு அரசு நெசவாளர்களுக்கு சேமிப்பினை ஊக்குவிக்கவும், பாதுகாப்பு அளிக்கவும், ஏற்படுத்தப்பட்ட சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நெசவாளர்களின் நலன் கருதி மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது. 

அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.43.09 லட்சம் மதிப்பில் 8 சதவிகிதம் அரசு மானியமும் ரூ.63.58 லட்சம் மதிப்பில் 6.5 சதவிகிதம் வட்டி மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000-மும், நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ரூ.1000  வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 583 நெசவாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 

நெசவாளர் நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நெசவாளர்களின் உடல்நலம் காக்கும் வகையில் ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்துடன் இணைந்த நெசவாளர் குடும்பத்தினர் 4 நபர்களுக்கு மருத்துவ நிதயுதவியாக வருடத்திற்கு ரூ.15,000 வழங்கப்படுகின்றது. 

இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 11012 நபர்களுக்கு ரூ.31.29 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நெசவாளர் மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 5 நபர்களுக்கு கொண்ட குழுமத்திற்கு ரூ.37 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 9712 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாக்டர் எம்.ஜி.ஆர். கைத்தறி நெசவாளர் நலவாழ்வு அறக்கட்டளை மூலமாக கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளின் பள்ளி இறுதி படிப்பிற்கு பின்னர் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை போன்ற படிப்பு படிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது.



மேலும், நெசவாளர்கள் தங்கள் இல்லங்களிலேயே தறிகளை வைத்து தொழில் செய்ய ஏதுவாக ஒவ்வொரு வீடும் 365 சதுரஅடியில் ரூ.2.60 லட்சம் மதிப்பில் கட்டப்படும். ஒவ்வொரு வீட்டில் 213 சதுர அடியில் தறிக்கூடத்துடன் கூடிய வாளும் அறை, 88 சதுர அடியில் படுக்கை அறை மற்றம் 64 சதுர அடியில் சமையல் அறை அமைக்கப்படும். 

வீட்டின் வெளித்தோற்றத்தில் மாற்றம் இல்லாமல் சமையலறை அல்லது படுக்கை அறையினை வசதிக்கேற்ப தேவைப்படும் இடத்தில் அமைத்துக் கொள்ளும் வகையில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதுவரை, கோவை மாவட்டத்தில் நெசவாளர்களுக்கு ரூ.12.87 கோடி மதிப்பீட்டில் 575 பசுமை வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. 

மேலும், நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தகுதியுள்ள பயனாளிகள் பயன்பெற்று பொருளாதாரத்தினை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...