கோவை, மதுரை மற்றும் சென்னை காவல் ஆணையர்களை பணியிட நீக்கம் செய்ய வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கோவையில் பேட்டி.
அரசு அதிகாரிகளுக்கான வரம்புகளை மீறி செயல்பட்ட கோவை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட மதுரை, சென்னை காவல் ஆணையர்களை பணியிட நீக்கம் செய்து கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ஆறு நாட்களுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 22 ஆம் தேதிக்கு பின் இரவு முதல் உளவு துறையின் செயல்ப்பட்டால் அரசும், காவல் துறையினரும் போராட்டத்திற்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையில் இறங்கினர். 23 ஆம் தேதி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், மாலை அவசர சட்டம் நிறந்தரமாகும் வரை இருக்க அனுமதி கேட்டனர், பிறகு மதியம் வரை அவகாசம் கேட்டனர், இறுதியாக வெரும் இரண்டு மணி நேரம் கேட்டனர். ஆனால் காவல் துறையினரின் நடவடிக்கை என்பது இது வரை சமீப காலங்களில் பார்த்திராத அளவு மிக மோசமாக இருந்தது.
நேரடியாக போலீசார் வன்முறையில் ஈடுபட்டதை பார்க்கும் போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி தாக்குதல், அதே போல் மாணவர்களை போலீசாரிடமிருந்து காப்பாற்ற உதவிய மீனவர்கள் மற்றும் மீனவ குப்பங்களை குறித்து கடுமையாக தாக்கி உள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அதிகாரிகளுக்கு உள்ள வரம்புகளை மீறி அங்கிகரிக்கப்பட்ட அமைப்புகளை அடிப்படை ஆதராம் இல்லாமல் தேச விரோதம், சமூக விரோதம் என கூறுவது கடுமையான வார்த்தைகளை பேசி உள்ளார். சமத்துவத்தை பறைசாற்ற தோழர், தோழ என்பது உலகம் முழுவதும் உச்சரிக்கும் வார்த்தை.
ஆனால் வேறு ஒரு வன்மத்தை வைத்துக்கொண்டு கமிஷ்னர் உங்கள் குழந்தைகளை தோழர் என கூப்பிட அனுமதிக்காதிர்கள் என கூறி உள்ளார். தோழர் என பேசியதால் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பல அமைப்புகளை சேர்ந்தவர்களை தேசத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியாதாக பேசி உள்ளார். தடியடி என்பது கூட்டத்தை கலைப்பதற்காக மட்டும் தான் நடத்தப்படுகிறது. ஆனால் குறி வைத்து தலையில் தாக்குவது, தனிப்பட்ட வன்மத்தை வைத்து கொடூரமாக தாக்குவது உள்ளிட்ட செயல்களில் போலிஸார் ஈடுபட்டனர்.
நமது சட்டம் வகுத்துள்ள விதிகள் படி தான் தேச துரோக வார்த்தை என வரையறை செய்ய வேண்டும் ஆனால் சட்டத்தை மீறி பொதுவாக அமைப்புகளை குற்றம் சாட்டிய கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போல் சென்னை, மதுரை காவல் ஆணையர்களை பணியிடை நீக்கம் செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.