நாடு முழுவதும் 68வது குடியரசு தின விழா கொண்டாடபட்டுவருகிறது. கோவை மாவட்ட பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆயுத படை காவலர் அணிவகுப்பு மரியாதைதையை ஏற்று கொண்டார்.

பின்னர் அரசு சார்பில 416 பயணாளுக்கு ஐந்து கோடியே மூன்று லட்சத்தி எழுபத்து நாலாயிறத்து முன்னூற்றி இருபத்தி எட்டு ரூபாய்கான நல திட்ட உதவிகள மற்றும் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்,முன்னோடி வங்கி,சிறப்பு மருத்துவருகான விருது உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வழங்கபட்டது. மேலும் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பதக்கங்களையும் ஆட்சியர் வழங்கினார்.


மேலும் பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதே போன்று மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.இதே போன்று மத்திய,மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக தேசிய கொடி ஏற்றப்பட்டு குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சி நடைபெறும் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்குள் பலத்த சோதனைகளுக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவினை கண்டுகளிக்க ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.
