கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 68-வது குடியரசு தின விழா நேற்று அக்கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது அக்கல்லூரியின் இணை தாளாளர் சங்கர் வானவராயர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களை புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவும் மற்றும் அவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்றும் சிறப்புரை வழங்கினார்.


இதைத்தொடர்ந்து, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு நடத்தினர். பின், மாணவர்கள் பங்கேற்ற சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அக்கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.