நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலய பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவிவருவதால் மரம், செடி, கொடிகள் மற்றும் புள்வெளிகள் காய்ந்து கிடப்பதால் தீ பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், வனத்துறையினர் தீப்பிடிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் தீ வைத்து தீ வனப்பகுதியில் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் தீ வனப்பகுதியில் பரவாமல் தடுக்கப்படுகிறது.

இது குறித்து கூறிய ரேஞ்சர் ஆரோக்கியசாமி, சாலை ஓரங்களில் புற்கள் காய்ந்து உள்ளதால் பல வகைகளில் தீ ஏற்பட வாய்புகள் உள்ளது. இதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் சார்பில் தீ தடுப்பு கோடுகள் காய்ந்த புற்களை எரித்து அமைக்கப்படுகிறது.
இதன் மூலம் தீ வனப்பகுதியில் பரவாமல் தடுக்கப்படுகிறது.
இந்த தீ தடுப்பு கோடுகள் சுமார் 15 கிலோமீட்டர் அமைக்கப்படுகிறது. இதில் 31 பணியாளர்களும் 11 வாச்சர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.