வால்பாறையில் நமது இந்திய தேசத்தின் 68-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. வால்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றி வைத்தார். இதில் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
இதே போல் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கோமதி தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வால்பாறை நகராட்சி ஆணையர் சம்பத்குமார் வால்பாறை நகராட்சி வளாகத்தில் தேசிய கொடியேற்றி வைத்தார்.

வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வள்ளிக்கண்ணு தேசிய கொடியேற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று இந்திய தேசத்திற்கு மரியாதை செலுத்தினர்.
வால்பாறை ஸ்டேன்மோர் பிரிவு பகுதியில் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் குசலவன் தேசிய கொடியேற்றி வைத்தார்.
இதில் முன்னாள் நகர தலைவர் இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.