கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியின் 26-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கேட்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் வி.இராஜகோபாலன் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து வி.இராஜகோபாலன் சிறப்புரையாற்றுகையில், "12-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கிய பட்டமளிப்புவிழா இன்றளவிலும் நம்நாட்டு முறைக்கேற்ப கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய மூன்று பேர்களின் பங்கு மிகமுக்கியமானதாகும். இம்மூவரின் பங்கும் எஸ்.என்.ஆர். நிறுவனத்தில்தான் முழுமையாகவும் நிறைவாகவும் உள்ளது.
பெற்றோர்கள்- குழந்தைகள், ஆசிரியர்கள்- மாணவர்கள் ஆகிய இரண்டு உறவுமுறைகளும் ஒரு சமூகத்தில் மிக முக்கியமாக பேணப்பட வேண்டியவைகளாகும்.
முன்பிருந்த பற்றாக்குறையுகம், செலவிடும் யுகமாக மாறி, பின் வளமான யுகமாக வளர்ந்து, தற்போது பெரும்வளமான சூழலில் பயணிக்கிறது. இது கால ஓட்டத்தில் மனிதகுலம் அடைந்த பெருவெற்றி என்றே கருதலாம்" என்று கூறிய அவர் இறுதியாக, "கல்வி என்பது தொடர்பயிற்சியாக இருக்கும்பட்சத்தில் கற்றல் என்பது மாணவனின் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிடுகின்றது. எனவே, மாணவர்கள் கற்றலை ஒரு தொடர் பயிற்சியாகவே பின்பற்றவேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.விஜயகுமார், கல்விப்புல இயக்குநர் முனைவர் ஏ.எபினேசர் ஜெயக்குமார், கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு.கருணாகரன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வி.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்ற இவ்விழாவில் 421 இளநிலை பட்டதாரிகளும் 132 முதுநிலை பட்டதாரிகளும் பட்டங்கள் பெற்றனர்.