சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் தற்போது மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகே வெள்ளலூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. கோவையில் இருந்து வெள்ளலூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாகதான் செல்கின்றன.

இதனால், ரயில்வே தண்டவாளம் அருகே மேம்பாலம் அமைக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் அந்த மேம்பாலத்தில் மின் விளக்குகள் இல்லை எனவும், இதனால் இரவு நேரங்களில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனிடையே, தற்போது சிங்காநல்லூர்- வெள்ளலூர் இடையிலான மேம்பாலத்தில் மின் விளங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.