கோவை மாநகராட்சியில் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம்- அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் தகவல்.


கோவை மாநகராட்சிப் பகுதியில் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் ஆகியோர் தகவல் தெரிவித்துள்ளனர்.



கோவை மாநகராட்சிக்குட்பட்ட நேரு விளையாட்டு அரங்கம் அருகில் இன்று (29.01.2017) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் ஆகியோர் புதிய உள்விளையாட்டரங்கம் கட்டுவதற்கான இடத்தினை பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் இதுகுறித்து பேசுகையில்,

தமிழக அரசு விளையாட்டுத் துறைக்கு தனிக்கவனம் எடுத்து அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைத்து ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு பதக்கங்கள் பெறுகின்ற வகையில் திட்டங்கள் செயல்படுத்தியது மட்டுமின்றி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருகின்றது. 

அதனடிப்படையில் தமிழக அரசின் விதி 110ன் கீழ் கோவை மாவட்டத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சர்வதேச தரம் வாய்ந்த உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்குரிய முதற்கட்டப்பணியாக நகரின் மையப்பகுதியில் சுமார் 5.63 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாநகராட்சி இடம் தேர்வு செய்யப்பட்டதை இன்று பார்வையிடப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து விரைந்து பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கு நீச்சல் குளம், வாலிபால், டென்னிச், அத்லெட்டிக்ஸ் மற்றும் பல்வேறு உள்ளரங்கு விளையாட்டுக்கள்  விளையாட்டுகளுக்கேற்ப உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதுடன் விடுதி வசதியும் அமைக்கப்படவுள்ளது. 



இதன் நோக்கம் மாணவ, மாணவிகள் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுகளை கற்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்பதேயாகும். கோவை மாவட்டத்தை பொருத்தவரை எப்பொழுதுமே விளையாட்டிற்கு அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள் அதனை மேலும், விரிவுபடுத்திட வேண்டும் எனத் தெரிவித்தார். 

பின்னர் நேரு விளையாட்டு அரங்கில் விடுதியில் தங்கி பயிற்சி பெற்றுவரும் மாணவர்களிடம் ஆலோசனை வழங்கும் பொழுது, தமிழக இளைஞர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் பெற ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும்படி, நல்ல உடல் ஆரோக்கியம் போதிய அளவு பயிற்சி, விடா முயற்சி இம்மூன்றையும் நிலைப்படுத்தி முயற்சி மேற்கொண்டால் ஒவ்வொருவரும் ஒலிம்பிக்கில் சாதனை படைக்கலாம் என தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கையில், 

தமிழக அரசு கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எப்பொழுதுமே தனிக்கவனம் எடுத்துக்கொண்டு கேட்கும் திட்டங்கள் அனைத்தையுமே உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்கள். அதனடிப்படையில் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் கோவை மாவட்டத்திற்கு புதிய உள்கட்டமைப்புடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி வழங்கியதுடன் நிதியையும் உடனே வழங்கினார்கள். 

அதனைத் தொடர்ந்து இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இன்று அமைச்சர்களுடன் பார்வையிட்டு பணியை துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி மேலும் கோவைப்புதூர் மற்றும் நகரின் மற்றொரு பகுதியிலும் புதிய விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை வைத்ததையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்குரிய பணிகளும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள்.

தற்போது அமைக்கப்படவுள்ள உள்விளையாட்டரங்கிற்கு ஒதுக்கீடு நிதி போதாது என்றால் அதற்கும் கூடுதல் நிதிவழங்க பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் ஆகியோர், அரசு அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டு அதன் தன்மை குறித்து கேட்டறிந்ததுடன், கொங்கு நாட்டு வரலாற்றை அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும் விதமாக ரூ.2 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட்டு அதற்குரிய இடமும் தேர்வு செய்யப்பட்டு அங்கு பணிகளை துவக்க உத்தரவிடப்பட்டுள்ளன. 

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வீ.சி.ஆறுகுட்டி, அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, விளையாட்டுத்துறை மண்டல முதுநிலை மேலாளர் ராஜமகேந்திரன், கீதாஞ்சலி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டான்லி பி.மேத்யூ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...