குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத் துவக்கவிழா


குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு துணை கட்டுப்பாட்டாளர் டாக்டர் எஸ்.பி.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று  இவ்விழாவை துவங்கிவைத்தார்.



இதைத்தொடர்ந்து, அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத்தைப் பற்றியும் அதை சார்ந்த தகவல்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். 

முன்னதாக குமரகுரு கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.குமார் வரவேற்புரை ஆற்றினார். இணை தாளாளர் சங்கர் வானவராயர் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். 

இதைத்தொடர்ந்து, குமரகுரு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் 6 ஆவணங்கள் காப்புரிமைக்காக சமர்ப்பிக்கபட்டுள்ளது. இத்தகைய தொடக்கம் இனி வரும் மாதங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேலும் பல ஆவணங்களுக்கு காப்புரிமை பெற உறுதுணையாக இருக்கும் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...