வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள எஸ்டேட் வழக்கறிஞர் அருண் கோவிந் என்பவரது வீட்டை சுமார் 8 யானைகள் கொண்ட காட்டு யானைக்கூட்டம் இன்று அதிகாலை 5 மணியளவில் முற்றுகையிட்டது.
இதில் அவரது வீட்டின் கதவை உடைத்து குட்டியானை ஒன்று உள்ளே நுழைந்ததால் மற்ற யானைகள் வீட்டின் ஜன்னல் வழியாக மிக்ஸி, கேஸ் ஸ்டவ், கிரைண்டர் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது.

இதைத்தொடந்து, வீட்டில் தனியாக இருந்த வழக்கறிஞர் அருண் கோவிந் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் வனத்துரையினருக்கும் தகவல் தெரிவித்ததைத் தொடந்து, ஊர் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் யானைகளை காட்டிற்குள் விரட்டினர்.
தொடர்ந்து வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் உள்ளதால் எஸ்டேட் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
மேலும், காட்டு யானை வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளான தாய்முடி, நல்லமுடி, ஆனைமுடி, ஈட்டியார் போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு வருகிறது.