கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் பல்கலைக் கழகத்தில் இன்று சர்வோதய தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
இதில், அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ப.ரா.கிருஷ்ணகுமார் தலைமையேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து அப்பல்கலைக் கழக உயர்கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன், சர்வோதய தின தீண்டாமை உறுதிமொழியை எடுத்துரைத்தார்.
பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியிள் ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில், பொருளாதாரத்துறை பேராசிரியர் அன்னபூர்ணி, பிரெஞ்சுத்துறை தலைவர் ஜி.ஜீவரத்னம் உள்ளிட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவியர்கள், தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்