மூன்று மாதத்திற்குள் நம் நகரத்தில் மாதிரி சாலை அமைக்கும் பணியில் கோவை மாநகராட்சி தீவிரம்


கோவை மாநகராட்சி மூன்று மாதங்களில் மாதிரி சாலைகளுக்கான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நமக்குக்கிடைத்த தகவலின்படி கோவை மாநகராட்சி பி.எஸ்.என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் இணைந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள டி.பி. சாலை, டி.வி.சுவாமி சாலை ஆகிய பகுதிகளில் இந்த மாதிரி சாலைகளை அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.

இந்த பணியின் போது மின்சாரம் மற்றும் தொலைபேசி வடங்கள் நேர்கோட்டில் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

கோவை மாநகராட்சி, இன்ஸ்டியூட் ஃபார் டிரேன்ஸ்பர்டேஷன் அன்டு டெவலப்மென்ட் பாலிசியுடன் இணைந்து டி.பி.சாலையில் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கும், டி.வி.சுவாமி சாலையில் 1.20 கிலோ மீட்டர் தூரத்திற்கும் இந்த மாதிரி சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பணியின் போது சாலையோரத்தில் உள்ள மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களை நிலத்தடியில் பதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், ஒரே மாதிரியான தகவல் பலகைகளையும், மற்றும் போக்குவரத்து சந்திப்புகளையும் ஒரேமாதிரியாக வடிவமைத்து வாகனங்கள் எளிதாக திரும்புவதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...