கோவை மாநகராட்சி மூன்று மாதங்களில் மாதிரி சாலைகளுக்கான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நமக்குக்கிடைத்த தகவலின்படி கோவை மாநகராட்சி பி.எஸ்.என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் இணைந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள டி.பி. சாலை, டி.வி.சுவாமி சாலை ஆகிய பகுதிகளில் இந்த மாதிரி சாலைகளை அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.
இந்த பணியின் போது மின்சாரம் மற்றும் தொலைபேசி வடங்கள் நேர்கோட்டில் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கோவை மாநகராட்சி, இன்ஸ்டியூட் ஃபார் டிரேன்ஸ்பர்டேஷன் அன்டு டெவலப்மென்ட் பாலிசியுடன் இணைந்து டி.பி.சாலையில் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கும், டி.வி.சுவாமி சாலையில் 1.20 கிலோ மீட்டர் தூரத்திற்கும் இந்த மாதிரி சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பணியின் போது சாலையோரத்தில் உள்ள மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களை நிலத்தடியில் பதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரே மாதிரியான தகவல் பலகைகளையும், மற்றும் போக்குவரத்து சந்திப்புகளையும் ஒரேமாதிரியாக வடிவமைத்து வாகனங்கள் எளிதாக திரும்புவதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது.