பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் பாதுகாப்பு, உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை கட்டுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நோய் தீர்க்கும் மருந்துகளின் விலையேற்றத்தால் பொதுமக்கள் பயன்படுத்தும் மருந்து பொருட்களின் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளதை கட்டுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொருள் மற்றும் சேவை வரியை மருந்துகள் மீது விதிக்கக்கூடாது,அன்னிய முதலீட்டை கட்டுபடுத்துதல், ஆன் லைன் மருத்துவ விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜாகீர் ஹுசேன் கூறும்போது, கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவ துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சாமானிய மக்களின் நோய் போக்கும் வழிவகை செய்யாமல் கார்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் வகையில் அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், மருத்துவ துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடு என்பது மருத்துவ துறையில் அடைந்த சுயசார்பை பாதித்து பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் வாழ வழி செய்துவிடும் என்பதால் மக்களுக்கு சாதகமான மருந்து கொள்கை அளிக்க வேண்டும் என கூறினார்.