பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை,மஞ்சகண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பனை கட்டி வருகிறது.பவானி ஆற்றின் குறுக்கே அனைகட்டி தண்ணீர் தேக்குவதால் கோவை,திருப்பூர்,ஈரோடு,கரூர் மாவட்டங்களில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் என்பதால கேரள அரசு இதனை கைவிட வேண்டும் என கோரி தடுப்பனை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.
கடந்த 29ம் தேதி த.பெ.தி.க, காங்கரஸ், தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் விவசாய சங்கங்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆனைகட்டி அருகே முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இன்று கோவை நூறடி சாலையில் உள்ள கேரளா சமாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த 20கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100 அடி சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலிஸார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.