வால்பாறையில் தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை கோழிக்கடை கணேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, அண்ணாவின் சாதனைகளை நினைவுகூறும் வகையில் உறுப்பினர்களும், தொண்டர்களும் அண்ணாவின் சில குறிப்புகள் குறித்து முழக்கங்கள் எழுப்பி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் ஜே.பி.பாஸ்கர், வழக்கறிஞர் பால்பாண்டி, ஈ.க.பொன்னுசாமி, மகுடீஸ்வரன், குமாரசாமி, கண்ணன், தர்மராஜ், அப்துல் நாசர், தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.