இந்து மத சர்ச்சை: வழக்கு போடச் சொல்லி சவால் விடுத்த ஆ.ராசா - போடப்பட்ட வழக்கும் தள்ளுபடி

இந்து மதம், இந்து மத பெண்கள் குறித்து தவறாக பேசியதாகவும், திமுக எம்.பி ஆ.ராசா நடவடிக்கடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.


சென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பியும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா கலந்துகொண்டார். அப்போது இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் குறித்து அவர் தவறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து ராசா மன்னிப்பு கேட்க வேண்டுமென்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தச் சூழலில் சர்ச்சையாக பேசிய ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ஆ.ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், ஆளுங்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ஆ.ராசா மீதான புகாரை காவல் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ஜோசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என அறிக்கை அளித்ததாக கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜோசப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் வேண்டுமானால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...