பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேரறிஞர் அண்ணா அவர்களது உருவ சிலைக்கும், திரு உருவ படத்திற்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன்படி கோவை மாவட்டத்திலும் பல பகுதிகளில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களால் பேரறிஞர் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக கோவையில் தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், பேரறிஞர் அண்ணா அவர்களது திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். உடன் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.