கோவை மாவட்டம் காரமடையில் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு தினமும் 10 குறள்கள் வீதம் 10 நாட்களுக்கு 100 குறள்கள் படிக்க வேண்டும் என்ற நூதன நிபந்தனைகளுடன் நீதிபதி சுரேஷ்குமார் ஜாமீன் வழங்கினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கடந்த 31ம் தேதி சாலையோரத்தில் சவுண்டமுத்து என்பவரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தனியார்கல்லூரி மாணவர்கள் (ஹரி, மணிகண்டன், முத்து) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதான மாணவர்கள் சார்பில் மேட்டுப்பாளையம்நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவினை விசாரித்த மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி சுரேஷ்குமார், மாணவர்கள் மூன்று பேருக்கும் நூதன நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். தனியார் கல்லூர் மாணவர்கள் மூவரும் தினமும் 10 குறள்கள் வீதம் 100 குறள்களை அதற்குரிய விளக்கத்துடன் மனப்பாடம் செய்து, மேட்டுப்பாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரிடம் ஒப்புவிக்க வேண்டும் எனவும் இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் உறுதி செய்து நீதிமன்றத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும்மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ் குமார் தனது உத்திரவில் தெரிவித்துள்ளார்.