"புற்றுநோய்க்கு எதிராக போராட முடியும்" கே.எம்.சி.எச் சார்பில் உலக புற்றுநோய் தினம் கையெழுத்து பிரச்சாரம்


புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோய் அல்ல, இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதால், முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை அதிகரிக்க, கே.எம்.சி.எச் மருத்துவமனை உலக புற்றுநோய் தினமான 04.02.2017 இன்று “கோயம்புத்தூர் விழா” குழுவினர்களுடன் இணைந்து, கோயம்புத்தூர் மத்திய இரயில் நிலையத்தில் ஒரு கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரத்தினை தலைமை விருந்தினராக கோயமுத்தூர் போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சி பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கே.எம்.சி.எச்- ன் விரிவான புற்றுநோய் பராமரிப்பு மைய அணியின் மருத்துவர்கள் மூலம், புற்றுநோயை எந்த சிக்கலான நேரங்களில் சமாளிக்க முடியும் என்ற தெளிவான செய்தியை கொடுத்து நிச்சயமாக புற்றுநோய்க்கு எதிராக போராட முடியும் என்பதே ஆகம். புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், சுகாதாரத்துறை ஒரு பெரிய அளவில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் தேவைகளைப் புரிந்து, ஒரு ஆரோக்கியமான சமூகத்தின், குறிப்பாக புகைபிடிப்பவர்களை முன்னிலைப்படுத்தி ஒரு வழக்கமான அடிப்படையில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இப்பணியில் ஈடுபட்டுள்ளது. 

கே.எம்.சி.எச்  மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆண், பெண்களுக்கான சிறந்த உடல்பரிசோதனை, மிகக்குறைந்த கட்டணத்தில் (ரூ.999க்கு) செய்து கொடுக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள முன்வந்தனர். இந்த 2017-ம் ஆண்டிற்குள் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது 25,000 பெண்களுக்கு “மார்பக உடல்நலம்” மற்றும் “கர்பப்பை வாய் நலம்” பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே கே.எம்.சி.எச் மருத்துவமனையின் நோக்கமாகும்.

 

இதனை கே.எம்.சி.எச் இயக்குனர் அருண் பழனிசாமி, கோவை இரயில் நிலையம் ஸ்டேஷன் மாஸ்டர் சின்னராஜு மற்றும் “கோயம்புத்தூர் விழா” அமைப்பு குழுவினர் ஐஸ்வர்யா, கே.எம்.சி.எச் டீன் குமரன் ஆகியோர் முன்னிலையிலும் காலை 8 மணிக்கு துவங்கியது. இதில் பொதுமக்கள் பலர் தங்களின் கையெழுத்துக்களை பதிவு செய்தனர். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தகவல் துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கே.எம்.சி.எச் இயக்குனர் அருண் பழனிசாமி பெண்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...