கோவையில் இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை 2 கி.மீ தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்த பயிற்சி உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

உக்கடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பயிற்சி உதவி ஆய்வாளர் அருண்குமார், சந்தேகத்துக்கிடமாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்திய போது தப்பிச்சென்ற அந்த நபரை 2 கி.மீ துரத்தி சென்று பிடித்து விசாரித்ததில் அவர் ஒரு இளைஞரை தாக்கி விட்டு வாகனத்தை திருடி வந்தது தெரிய வந்தது.


கோவை: திண்டுக்கல்லில் பயிற்சி உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் அருண்குமார். இவர் தற்போது, கோவைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார்.

இந்த நிலையில் உதவி-ஆய்வாளர் அருண்குமார் நேற்று இரவு உக்கடம் போலீசாருடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தார். அப்போது 2 இளைஞர்கள் வெவ்வேறு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை பார்த்த எஸ்.ஐ அருண்குமார் தடுத்து நிறுத்தி மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காண்பிக்கும்படி கூறினார்.

இதனால் அந்த இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இருவரில் ஒருவர் தனியாக சென்று மாயமானார். இதனை பார்த்த மற்றொரு இளைஞரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவி ஆய்வாளர் அருண்குமார் அந்த இளைஞரை துரத்தி சென்றார்.

2 கிலோ மீட்டர் தூரம் விடாமல் இளைஞரை துரத்திச் சென்று மடக்கி பிடித்தார். பின்னர் உடனே அவர் அந்த இரு சக்கர வாகன எண்ணை வைத்து விசாரித்த போது, அந்த இரு சக்கர வாகனம் போத்தனூரை சேர்ந்த நபருடையது என்பதும் அவரை தாக்கி விட்டு 3 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் அருண்குமார் மடக்கி பிடித்த இளைஞரை உக்கடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.



விசாரணையில் அந்த வாலிபர் காளப்பட்டியை சேர்ந்த ரத்திஷ் (20) என்பது தெரியவந்தது.

பின்னர், போத்தனூரில் இருந்து வாகனத்தை திருடி வந்ததால் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உக்கடம் வந்து அந்த இளைஞரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



இரு சக்கர வாகனத்தை திருடி வந்த வாலிபரை 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்த பயிற்சி உதவி ஆய்வாளர் அருண்குமாரை பொதுமக்கள், அதிகாரிகள் பாராட்டினர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...