வால்பாறை அருகே நியாய விலைக்கடையை உடைத்து சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறை நடுமலை எஸ்டேட் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், தாழம்பூ நியாய விலை கடையின் ஜன்னல் கதவை உடைத்து, அரிசி மூட்டைகளை தின்று அட்டகாசம்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அடுத்த நடுமலை எஸ்டேட் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆறு காட்டு யானைகள் நேற்று இரவு நடுமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளன.



இதனையடுத்து அங்குள்ள தாழம்பூ நியாய விலை கடையின் ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.



மேலும் கடைக்குள் இருந்த இரண்டு மூட்டை அரிசியை தின்றுள்ளன. இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறுவதை வனத்துறை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டு யானைகள் நியாய விலைக்கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...