35 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்று வரும் கோவை கருப்பராயன் கோயில் திருவிழா

கோவையில் உள்ள பிரசித்திபெற்ற கருப்பராயன் கோயில் திருவிழா 35 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் மருதமலை சாலையில் உள்ள லிங்கே கவுண்டன் புதூர் பகுதியில் கருப்பராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 18ஆம் தேதி பூச்சாட்டுடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நேற்று வெள்ளிங்கிரி மலையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் லிங்கே கவுண்டர் புதூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மங்கல இசை நிகழ்ச்சியுடன் கருப்பராய சுவாமி குதிரை வாகனத்தில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டார். அதனைதொடர்ந்து பக்தர்கள் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டனர். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனைதொடர்ந்து மாலை 4 மணிக்கு மாரியம்மன் கோயிலிருந்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனையடுத்து இரவு 7 மணிக்கு கருப்பராயசுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை கருப்பராயசுவாமிக்கு 50-க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டி படையலிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Newsletter

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...