கோவை மாவட்டம், தேவராயபுரம் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களிடம் இச்சிறப்புத் திட்ட வீடுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறிதுநேரம் உரையாற்றியதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.