கோவையில் பழங்கால கோவில்களுக்கு அருகே மின்மயானம் அமைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் பழங்கால கோவில்கள் மற்றும் பள்ளிக்கூடத்தின் அருகே மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதற்கட்ட பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை- பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டு கால பழமைவாய்ந்த ஈஸ்வரன் திருக்கோவில், 1350 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் மற்றும் 500 ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் திருக்கோவில் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.

இவற்றிற்கு அருகில் தனியார் மேல்நிலை பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.இந்த சூழலில் ஈஸ்வரன் திருக்கோவில் மற்றும் தனியார் பள்ளி இடையே புதிதாக சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் மயானம் அமைக்க ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில் இன்று அங்கு ஜேசிபி வாகனம் மூலம் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டன.



இதையறிந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



மேலும் அதிகாரிகளையும் ஜேசிபி வாகனத்தையும் முற்றுகையிட்டு சுடுக்காட்டிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்த செட்டிபாளையம் காவல்நிலைய போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



மேலும், இது தொடர்பாக உயரதிகாரிகளிடம் பேசி தீர்வு எட்டப்பட்ட பிறகே மின் மயானம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக பேசிய பொதுமக்கள், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில்கள் மற்றும் பள்ளி ஆகியவை அடுத்தடுத்து இருந்தும் அதன் அருகே மின் மயானம் அமைப்பது என்பது கண்டிக்கத்தக்கது. மின் மயானம் அமையும் பட்சத்தில் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

ஏற்கனவே கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கும் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும் செல்லும் பேருந்துகள் ஒத்தக்கால் மண்டபம் பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் மேம்பாலத்தில் ஏறி செல்வதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வரும் சூழலில், மின் மயானம் நெடுஞ்சாலைக்கு அருகிலேயே அமையும் பட்சத்தில் போக்குவரத்து பாதிக்கப்படும்.

தற்போது மின்மயானம் அமைய உள்ள இடத்தை விடுத்து வேறு பகுதியில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலேயே மின் மயானம் அமைக்கும் பட்சத்தில் மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...