திமுக சார்பில் குன்னூர் வி.பி.தெருவில் இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

குன்னூர் வி.பி.தெருவில் இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் "எதிர்கால சந்ததிக்கு திமுக வின் தியாக வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் குன்னூர் வி.பி.தெருவில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றினார்.



திமுக வின் பொதுச்செயலார் துரைமுருகன் பேசியதாவது:-

உலகத்திலேயே ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்த வரலாறு எவருக்கும் கிடையாது. ஆனால் ஒரு கட்சியில் ஐம்பது ஆண்டுகாலம் தலைவராக இருந்தவர் திமுக மறைந்த தலைவர் கலைஞர் மட்டும் தான்,



அப்படிபட்ட மகத்தான ஜாம்பவானாக திகழ்ந்த கலைஞர் மிசாவில் இருந்து இக்காட்சியை காப்பாற்றியதுடன், பதிமூன்று ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத திமுக வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்.

இன்னொரு முறை தமிழ்நாட்டில் திமுக போன்ற ஒரு கட்சி உருவாக முடியாது வரும் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டு ஆளுமையில் திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே இருக்கும்.

மேலும் மற்ற கட்சிகள் தமிழ்நாட்டில் பெயரளவில் மட்டுமே செயல்படும். இத்தகைய வரலாற்று மிக்க திமுகாவை பாதுகாக்க வேண்டும் என்றால் இக்கட்சியின் கொள்கைகள் அழியாமல் பாதுகாத்திட வேண்டும்.

ஆகையால் இளம் சமுதாயம் மத்தியில் திமுக வின் வரலாற்றை கற்று கொடுக்க வேண்டும். யார் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தாலும் இந்தியை திணிப்பது அதிக ஆர்வம் காட்டுகிறது.

குறிப்பாக பாஜக அரசு இந்தியை திணிப்பதில் காட்டெருமை போன்று யாரையும் எதையும் பொருட்படுத்தாமல் அதன் போக்கில் செல்வது போல் சென்று கொண்டிருக்கிறது இவர்களை வளரவிட்டால் பேராபத்து காத்து இருக்கிறது என எச்சரிக்கை விடுத்தார்.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.



இந்நிகழ்ச்சியில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...