திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி மும்தாஜ், தனது மகள் அனீஷ் ஆரிஃபா வீட்டை அபகரித்துக் கொண்டு வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கியதால் தன்னை கருணை கொலை செய்யும்படி ஆட்சியரிடம் மனு.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகேயுள்ள பெஸ்ட் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ். இவர் தனக்கு சொந்தமான வீட்டை தனது மகளே அபகரித்துக் கொண்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அவரது மனுவில் தெரிவித்துள்ளதாவது, நானும் எனது கணவரும் எங்களது சொந்த உழைப்பில் சொந்தமாக வீடு ஒன்று வாங்கி வசித்து வந்தோம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கணவர் இறந்துவிடவே நான் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தேன்.
மேற்கொண்டு இருந்த மற்றொரு வீட்டின் வாடகையை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தேன். இந்த நிலையில், எனது மூத்த மகள் அனீஸ் ஆரிபா மற்றும் அவரது கணவர் உமர் ஷரீஃப் என்னை பார்த்துக் கொள்வதாக கூறி வீட்டில் குடியேறினர்.
பின்னர் காலப்போக்கில் மகளும் மருமகளும் சேர்ந்து என்னை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர். இதனால் நான் வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறேன்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரண்டு முறை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளேன். இந்த மனுக்கள், தற்போது தாசில்தார் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளன.
இந்நிலையில் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதால் மாத்திரை இன்றி வாழ முடியாத நிலையில், அந்த வீட்டில் இருந்து அவர்களை வெளியேற்றி தனது வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். இல்லையேல் கருணை கொலை செய்து விடுங்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.